தாராபுரம்,
தாராபுரம் அம்மா உணவகத்திற்கு நகராட்சி குப்பை வண்டியின் மூலம் உணவு பொருட்களை எடுத்துசெல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் பேருந்து நிலையம் மற்றும் சந்தை பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலையில் இட்லியும், மதியம் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவு பொருட்கள் சந்தை பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படுகிறது. இங்கு இருந்துதான் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு இட்லி, சாம்பார் சாதங்கள் பாத்திரங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.இந்நிலையில் இந்த உணவு பொருட்கள் அனைத்தும் நகராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டியில் எடுத்து செல்லப்படுவது தாராபுரம் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. ஏழை, எளியமக்கள் அம்மா உணவகத்தில் தங்களது பசியை போக்கிக்கொள்ளும் நிலையில், அவர்களை அவமானப்படுத்தும் வகையில் இந்த செயல் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், துய்மையை பராமரிக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே மறைந்த முதல்வரின் பெயரில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களை குப்பை வண்டியில் எடுத்துச் செல்வது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: