எட்டு வழிச்சாலைக்காக நில அளவையில் ஈடுபடும் காட்சிகளை டிவியில் காட்டும்போது தென்னை மரங்களும், செடி கொடிகளும், வயல் வெளிகளுமாய் பசுமை அடர்ந்து பரந்து கிடக்கும் நிலங்களைக் காண முடிகிறது. நாளை அந்த நிலங்களின் கதி என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே பதறுகிறது.

சட்டென்று மாறி விடுகிற கண நேர காட்சிகளே இப்படி தொலைவில் இருக்கும் நம்மை வதைக்கும்போது, காலகாலமாய் அங்கேயே வாழ்ந்து, தங்கள் மூச்சையெல்லாம் நிலங்களில் நிரப்பி வைத்திருக்கிற அந்த மக்கள் எப்படி துடிதுடிப்பார்கள்?

“எங்களைக் கொன்னுப் போட்டுட்டு நிலத்த எடுத்துக்குங்க” என்று கதறும் குரல், ஈரக்குலையை அறுக்கிறது.

இவை எதையும் சட்டை செய்யாமல், பொருட்படுத்தாமல் நிலங்களை மூர்க்கத்தனமாக பறிக்க முயல்கிறவர்கள் மனிதர்களாக இருக்க மாட்டார்கள்.

‘அரசு இயந்திரம்’ என்று அழைக்கப்படுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

Mathavaraj

Leave A Reply

%d bloggers like this: