நீதி மன்றத்தை விமர்சிக்கக் கூடாதென கொந்தளிக்கும் மகாபிரபுக்களே !

தயவு செய்து உங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் …

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளில் 35 சதவீதம் பேரே தண்டனை பெற்ற கைதிகள் ; மீதி உள்ள 65 சதம் பேர் விசாரணைக் கைதிகளே ; அதாவது விசாரிப்பதற்காகச் சிறையில் அடைக்கப்படுள்ளோரே !

அதிலும் 5 சதம் பேர் மட்டுமே பாலியல் வன்புணர்வு போன்ற கொடூரக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதிகள்.

மீதமுள்ள 60 சதம் கைதிகள் சிறுதிருட்டு ,சிறிய தப்புகள் ,சந்தேகம் என அழைத்து வரப்பட்டவர்களே ;

கிட்டத்தட்ட இவர்கள் அனைவரும் சொந்த பிணையில் வெளியே விடத்தக்க எளிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களே !

அதிலும் ஆறுமாதம் முதல் பத்து வருடம் வரை விசாரணைக் கைதியாகவே வதைபடும் இந்த மனிதஜீவன்களை கண்டு கொள்ள எந்த நீதிமன்றத்துக்கும் மனச்சாட்சி இல்லை…

ஏன் தெரியுமா ?

இப்படி எவ்வித நியாயமும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் பெரும்பாலும் தலித்துகள் ,பிற்படுத்தப்பட்டோர் ,சிறுபான்மையோரே .. .

வழக்கறிஞருக்கோ காவலருக்கோ ஆயிரம் ரூபாய்கூட தர வசதியற்ற ஏழைகள் …

இன்னும் உறுத்தும் உண்மை இவர்களில் கணிசமானோர் பெண்கள் ; இவர்கள் மீது யாருக்கும் அக்கறையே இல்லை …

என்ன சமூகம்? என்ன நீதி ?

காறித் துப்புகிறேன் …

த்தூ …த்தூ…. த்த்தூ…..

Su Po Agathiyalingam

Leave A Reply

%d bloggers like this: