கோவை,

கோவையின் குடிநீர் விநியோகிக்கும் உரிமம் ரூ.3150 கோடிக்கு பிரஞ்சு நாட்டு தனியார் நிறுவனமாக சூயஸுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதனால் கோவை மக்கள் குடிநீர் கட்டணம் உயரக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயமுத்தூரில் பொதுப்பணித்துறையின் குடிநீர் வழங்கும் சேவைப் பணியை பன்னாட்டுத் தனியார் நிறுவனம் சூயஸுக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கி உள்ளது.

சூயஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிலவற்றின் குடிநீர் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2012ல் தில்லியின் மால்வியா மாவட்டத்தின் குடிநீர் வழங்கும் பணியை முதன் முதலாக பெற்றிருந்தது. மேலும், கொல்கத்தா மற்றும் பெங்களூரு நகரங்களிலும் இந்நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. இதுவரை மொத்தமாக 550 கோடி லிட்டர் தண்ணீரை 4.4 கோடி இணைப்புகளுக்கு வழங்கி வருவதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

கோயமுத்தூர் மாநகராட்சி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கூயஸுக்கு பன்னாட்டு நிறுவனத்திற்கு சுமார் 400 மில்லியன் யூரோ(சுமார் 3150 கோடி ரூபாய்) மதிப்பிலான திட்டமாக கோயமுத்தூரின் குடிநீர் வழங்க உரிமத்தை 26 ஆண்டுகளுக்கு  பெற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில்   குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் கோயமுத்தூரின் சுமார் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி நிறுவனங்கள் என 1,50,000 இணைப்புகள் என மொத்தம் 1200 கிலோமீட்டரிலான தொலைவில் அமைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோவை மக்கள் குடிநீர் கட்டணம் உயரக் கூடும் என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: