பெங்களூரு:
தில்லியில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி, கடந்த 7 நாட்களாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, கோபால் ராய், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் துணை நிலை ஆளுநர் இல்லத்தில் போராட்டம் நடத்தினர்.பிரதமர் மோடி தலையிட்டு இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், மோடி கண்டுகொள்ளவில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்குவங்க முதல்வர்கள் பேசியும் மோடி அலட்சியப்படுத்தினார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நாட்டின் மிக உயர்ந்த தலைவரே; நீங்கள் உடற்தகுதி சவாலிலும், யோகா, உடற்பயிற்சி செய்வதிலும் மிகவும் பரபரப்பாக இருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், எங்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.

ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டுக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிப்பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் அதிகாரிகளிடம் கூறி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றச் சொல்லுங்கள். அதன்பின்பு கூட உங்களின் உடற்பயிற்சியையும், வேலையையும் நீங்கள் தொடரலாம்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.