புதுதில்லி:
காடுகளை அழிக்கும் ‘கார்ப்பரேட் சாமியார்’ ஜக்கி வாசுதேவ், இந்திய ராணுவ வீரர்களுக்கு, யோகா பயற்சி அளிக்கப் போகிறாராம். உலக யோகா தினமான வியாழன்று சியாச்சின் பனிமலையில் இருப்பவர்களுக்கு தனது யோகாவை கற்றுத்தரப் போகும் ஜக்கி, இதற்காக காஷ்மீரின் லே முகாமை செவ்வாயன்றே சென்றடைந்து இருக்கிறார்.உலகின் மிக உயர்ந்த யுத்தமுனையாக கருதப்படும், சியாச்சின் பனிமலையில் 18 ஆயிரம் அடி முதல் 21 ஆயிரம் அடி உயரத்தில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த வீரர்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், மனத்தைச் சமநிலையில் வைத்துக் கொள்ளவும், ஜக்கி-யின் ஈஷா யோகா கம்பெனியைச் சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியை அளிக்க இருக்கிறார்களாம்.

எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிற்பாதுகாப்புப் படை, தொடர்வண்டித் துறை பாதுகாப்புப் படை உட்பட துணை ராணுவ வீரர்களுக்கும், ஜக்கி கம்பெனி யோகா பயிற்சி அளிக்க உள்ளதாம். இதற்கான ஏற்பாடுகளை மோடி அரசு செய்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: