புதுதில்லி,
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையை நியமனத்திற்கு உயர் நிதிமன்றம் விதித்த தடையை நீங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மே 27ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரையும் நியமிக்கப்பட்டனர்.

ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். கல்வியில் சிறந்த பின்னணி கொண்டிருக்க வேண்டும். ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கிடையாது என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனால் அவர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

இதுபற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கு விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் துணைவேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து துணைவேந்தர் செல்லதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.  இதுபற்றிய விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.  இதில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இந்த மனுவிற்கு 3 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: