பெங்களூரு,
கார்நாடகாவில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த சதாம் உசேன், சதாம், முகமது, ஆசிப், ஷாருக் உள்ளிட்ட 11 பேர் காரில் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்றிரவு கோவாவில் இருந்து புறப்பட்ட அவர்கள் தமிழகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.இன்று காலை 5 மணியளவில் கர்நாடக மாநிலம் சித்திரத்துர்கா மாவட்டத்தில் அவர்கள் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 5 இளைஞர்களின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: