திருச்செங்கோடு,
போராட்டம் நடத்தியதற்காக ஊதியம் பிடித்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செங்கோட்டில் நெடுஞ்சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நெடுச்சாலைப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தமிழகம் முழுவதும் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர்கள் வாயில் கருப்புத்துணி கட்டியும், ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சாலைப்பணியாளர்களின் 3 நாட்கள் ஊதியத்தை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், சாலைப்பணியாளர்களின் முறையற்ற பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரியும் செவ்வாயன்று திருச்செங்கோடு உதவிக்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் கே.பாஸ்கர் தலைமை வகித்தர். மாவட்ட பொருளாளர் வி.விவேகானந்தன் முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எம்.பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக வட்ட பொருளாளர் ஆர்.பன்னீர்செல்வம் நன்றி கூறினார். இதில் சாலைப்பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.