பாட்னா :

பீகார் மாநில பள்ளி தேர்வு வாரியம் நாளை தேர்வு முடிவுகளை வெளியிட இருந்த நிலையில் விடைத்தாள்கள் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..

பிகார் மாநிலம் கோபாலகஞ் என்ற இடத்தில் உள்ள SS Balika Inter School என்ற அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 30000 விடைத்தாள்கள் காணமால் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் 5ம் தேதி சீல் வைக்கப்பட்டு பள்ளி அறையில் பாதுகாக்கப்பட்ட விடைத்தாள்களை தேர்வு வாரிய அலுவலர்கள் சரிபார்ப்புக்காக கேட்ட நிலையில் 213 விடைத்தாள் பைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியின் அலுவலரான சாத்துசிங் மற்றும் பாதுகாவலர் அசபுஜன் சிங் என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.