அகமதாபாத்:
பிட்காயின் அபகரிப்பு வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ நளின் கொடாடியா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.சூரத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சைலேஷ் பட். இவருடைய கூட்டாளி கிரிட் பலாடியா. இந்நிலையில், சைலேஷ் பட் அம்ரேலி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தொழில் கூட்டாளியான பலாடியாயை ஒரு கும்பல் கடத்திச் சென்றதாகவும், பின்னர் அவரை விடுவிப்பதற்காக தன்னை மிரட்டி ரூ. 9 கோடியே 95 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயினை பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.இதுதொடர்பாக விசாரணையில் இறங்கிய போலீசார், பலாடியாவை மீட்டதுடன், இந்த கடத்தல் ஒரு நாடகம் என்பதையும், இதன் பின்னணியில் பாஜக முன்னாள் எம்எல்ஏ-வான நவீன் கொடாடியா இருந்ததையும் கண்டறிந்தனர். இதையடுத்து, கொடாடியா தலைமறைவாகி விட்ட நிலையில், பிட்காயின் மோசடி வழக்கில் கொடாடியா, சைலேஷ் பட் ஆகிய இருவருமே குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: