ஈரோடு,
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஈரோட்டில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர்.இந்த கொடூர சம்பவத்திற்கு காரளமான காவல்துறையினர் மற்றும் உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்துவதுடன், அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் கீழ் விசாரணைநடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பட்டங்கள் நடைபெற்றன.

ஈரோடு நகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி.சுந்தரராஜன் தலைமை வகித்தர். மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிரமணியன், ப.மாரிமுத்து மற்றும் கோமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். கடம்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் எம்.சடையலிங்கம் தலைமை வகித்தார். மலை வட்டார செயலாளர் சி.துரைசாமி, கமிட்டி உறுப்பினர்கள் சி.ராசப்பன், தாயிலம்மாள், என்.சடையப்பன், பி.சடையப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நசியனூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, வி.ஏ.விஸ்வநாதன் மற்றும் பி.ராஜா, என்.பாலசுப்பிரமணி, பி.லலிதா, குப்புசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கட்சியின் முன்னணி ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கொடுமுடி பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மொடக்குறிச்சி தாலுகா செயலாளர் கே.பி.கனகவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.விஜயராகவன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அந்தியூர் பவானி பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாகமிட்டி உறுப்பினர் எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நடராஜன், ஏ.ஜெகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்று தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.