திருப்பூர்,
கிராம நிர்வாக அலுவலர்கள் மீது முறையற்ற பணியிட மாறுதல் மேற்கொண்ட திருப்பூர் சார் ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் செவ்வாயன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்,

திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக உள்ள ஷ்ரவண்குமார் தொட்டிபாளையம், மன்னரை, வேலம்பாளையம், செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர்களை முறையற்ற வகையில் பணியிட மாறுதல் செய்துள்ளார். இவ்வாறு, சார் ஆட்சியர் தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்கினை கடைபிடித்து வருவதாகவும், அவற்றை கைவிடக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக செவ்வாயன்று திருப்பூர் குமரன் சிலை அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், வாட்டாட்சியர் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தபேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.