நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 8 மீனவர்கள் இரண்டு பைபர் படகுகளில் திங்களன்று மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரையின் தென்கிழக்கே செவ்வாயன்று அதிகாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கேபிள் வயரால் மீனவர்களை தாக்கி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்கியது குறித்து கடலோர காவல்படையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.