சென்னை:
தமிழகத்தில் மூடப்பட்ட 1300 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மற்றொரு வழக்கில் மாநகராட்சி, நகராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்து மதுக் கடைகளுக்கு உரிமம் வழங்கலாம் என உத்தரவிட்டது.

ஆனால் நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றாமல், 1,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிரான வழக்கில் அந்த டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி பகுதி சாலைகளை வகை மாற்றம் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டது.
அந்த அரசாணையின் படி 1,300 மதுக்கடைகள் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி சாலைகளை வகைப்படுத்தும் அதிகாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையருக்கு இல்லை என்றும் அந்த உத்தரவின் கீழ் திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகளையும் மூட உத்தரவிடுமாறும் தொடரப்பட்ட வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளதாகவும், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இருப்பதால் அது தொடர்பான வழக்கை விசாரணை செய்ய முடியாது எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.