சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூச்சுத்திணறலுடன் பேசிய ஆடியோ, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, எடுக்கப்பட்டது தானா என்பதில் சந்தேகம் எழுந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஜெயலலிதா மூச்சுத் திணறலுடன் பேசிய ஆடியோ பதிவுகளை மருத்துவர் சிவக்குமார், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வருகின்ற ஆறுமுகசாமி ஆணையத்திடம் கடந்த மாதம் சமர்ப்பித்தார். ரத்த அழுத்தம் 80க்கு 140 என்ற அளவு நார்மல் தான் என்று மருத்துவரிடம் ஜெயலலிதா கூறுவது போல் அந்த ஆடியோ உள்ளது. ஆனால், அன்றைய தினத்தில் ஜெயலலிதாவுக்கு இருந்த ரத்த அழுத்த அளவு சம்பந்தமாக அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த ஆவணங்களில் முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த ஆடியோவை மருத்துவர் அர்ச்சனா எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவர் அர்ச்சனா அன்றைய நாளுக்கு மறுநாள் தான் ஐசியூவில் பணிக்கு வந்ததாக அப்போலோ மருத்துவமனை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா பேசிய ஆடியோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டது தானா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: