கோவை,
கோவையில் சரக்கு வேன் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற துணி வியாபாரி செவ்வாயன்று உயிரிழந்தார்.கோவை, கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்தவர் கே.பரமசிவம் (50), இவர் துணி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், திங்களன்று இரவு பணி முடித்து விட்டுஇருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆத்துபாலம் சிக்னல் அருகே சென்ற போது அதே வழியாக காய்கறி ஏற்றி வந்த சரக்கு வேன் பரமசிவத்தின் மீதுமோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பரமசிவம் செவ்வாயன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்தார். இதுகுறித்து கோவை மாநகரபோக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சரக்கு வேனை ஒட்டி வந்த குமார் (40) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: