கோவை,
ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகத்தை கண்டித்து கோவையில் வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நலிவடைந்த வரும் யூனியன் வங்கிகளை லாபத்தில் இயக்கும் நடவடிக்கைகளை வங்கி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வங்கியின் நஷ்டத்தை காரணம்காட்டி ஊழியர்களின் நலத்திட்டங்கள் மற்றும் பணப்பயன்களை நிர்வாகம் பறித்து வருகிறது. மேலும், வங்கிப்பணிகளை வெளியாட்களை கொண்டு ஒப்பந்த முறையில் அவுட்சோர்சிங் செய்யப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக செயல்படும் யூனியன் வங்கி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) அறைகூவல் விடுத்தது.இதன்ஒருபகுதியாக கோவை ஒப்பணக்கார வீதி யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மகேஷ்வரன் கண்டன உரையாற்றினார். இதில் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் தனபால், சிவானந்தம் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.