====எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்===

ஃபார்வேர்ட் மெயிலில் தலைப்பை மாற்ற
ஜிமெயிலில் உங்களுக்கு வந்த மின்னஞ்சலை மற்றொருவருக்கு ஃபார்வேர்ட் செய்யும்போது அதில் சப்ஜெக்ட் (தலைப்பு) பகுதி காட்டப்படாது. எனவே, அதில் திருத்தம் இல்லாமல் அப்படியே அனுப்பவேண்டிவரும். சப்ஜெக்ட் பகுதியில் பழைய டெக்ஸ்ட்டை நீக்கி அல்லது மாற்றம் செய்து அனுப்ப Forward என்பதை கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில், முகவரியை இடும் பகுதிக்கு இடது புறமாக உள்ள அம்புக் குறியை கிளிக் செய்தால் தோன்றும் சிறு மெனுவில், Edit Subject என்பதைத் தேர்வு செய்தால் முழுமையான கம்போஸிங் மெயில் விண்டோ திறக்கும். இதில் சப்ஜெக்ட் பகுதியில் விருப்பமான தலைப்பை மாற்றி அனுப்பலாம்.

டுவிட்டர் போல @ குறியீடு ஜிமெயிலில்
டுவிட்டரில் யாரையேனும் @ குறியீட்டின் மூலம் இணைத்து செய்தியை வெளியிடுவது நடைமுறையிலிருக்கிறது. இதுபோன்ற வசதி அப்டேட் செய்யப்பட்டுள்ள ஜிமெயில் ஸ்மார்ட் கம்போஸில் சேர்க்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி @ குறியீட்டிற்கு பிறகு பெயரின் முதல் எழுத்தை குறிப்பிடும்போது, நம் மின்னஞ்சல் முகவரிப் பட்டியலில் உள்ள நபர்களின் மின்னஞ்சல்கள் காட்டப்படும்.அதில் தேவையானதை தேர்வு செய்து இணைக்கலாம். இந்த வசதியின் மூலம் மின்னஞ்சல் பெறுபவர் @ குறியீட்டிற்கு பின் உள்ள பெயர் இணைப்பை கிளிக் செய்து மின்னஞ்சலை கம்போஸ் செய்து கொள்ளலாம்.இதில், மேலும் ஒரு கூடுதல் வசதியாக + குறியீட்டிற்கு பின் இதே போல மின்னஞ்சல்களை சேர்த்தால் செய்தி அவர்களுக்கும் அனுப்பப்படும்.

ஆப்ஸ் அனுமதிகளை நிர்வகிக்கலாம்
போனில் ஆப்ஸ்களை நிறுவுவதில் நமக்கு உள்ள பிரச்சனை இவை தேவையில்லாமல் கேட்கும் அனுமதிகள்தான். கேலரி, கேமரா, எஸ்எம்எஸ், போன் காண்டாக்ட்களை அணுகுதல் எனப் பல அனுமதிகளைத் தேவையின்றி கேட்கும். அதற்கு சரியென்றால்தான் ஆப்ஸை இன்ஸ்டால் செய்யமுடியும். புதிதாக வந்துள்ள ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் அப்டேட்களில் இப்பிரச்சனைக்கு வழிகாணப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரை லாலிபப் பதிப்பிற்கு பிறகு இந்த வசதி பலருக்கும் கிடைக்கிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதியை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.போன் செட்டிங்ஸ் மெனு செல்லவும். அதில் ஆப்ஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன் (Apps and Notification) என்பதில் நுழையவும். ஆப் பெர்மிஷன் (App permission) என்ற ஆப்ஷன் இருக்கிறதா என்று பார்த்து க்ளிக் செய்யவும். இப்போது கேமரா, மெஸேஜ், கால் போன்ற பயன்பாடுகளின் பட்டியலை பார்த்து அதில் அனுமதி மாற்றங்களை செய்யலாம். ஒவ்வொரு அனுமதியாக க்ளிக் செய்து, அதனை எத்தனை செயலிகள் பயன்படுத்துகின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் செட்டிங்களை Disable செய்யலாம்.

குறிப்பிட்ட ஆப்ஸ்க்கு அனுமதி நிறுத்த
அனுமதிகளை முழுமையாகப் பார்த்து நிறுத்துவதற்கு பதிலாக சந்தேகத்திற்குரிய ஆப்ஸ்-ன் அனுமதியை மட்டும் சோதித்து நிறுத்துவதற்கு செட்டிங்ஸ் மெனு சென்று அதில் ஆப்ஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன் (Apps and Notification) செட்டிங்ஸ் பகுதியில் ஆப்ஸ் பட்டியலை முழுமையாக பார்க்க உதவும் See all apps என்பதை க்ளிக் செய்யவும். இனி சந்தேகிக்கும் செயலியை தேர்வு செய்து அனுமதியை (Permissions) நிறுத்தலாம் மாற்றியமைக்கலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.