தாராபுரம்,
தாராபுரம் கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கேசவகுமார் (44). இவர் தாராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கேசவக்குமார் குமாரசாமிக்கோட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி செல்லும் பேருந்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது, கரையூரைச் சேர்ந்த காளியப்பன் மகன் தேவராஜ் (25) முன்புறம் படியில் நின்று பயணம் செய்ததை கண்டித்த கேசவகுமாரை தேவராஜு தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து கேசவக்குமார் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: