காலங்காலமா
சேர்த்தி வச்ச
காணிநெலம்
கால்வயிறு
கஞ்சி குடிக்க
கால்கடுக்க
கழனியில
வெயில்ல நின்னு
களைபுடுங்கி
நாத்து நட்டு
அறுத்தெடுத்தா
அறுவைக்கூலி
கட்டாம கடனை
கட்டமுடியாம
கயித்துல தொங்குன
புருசனை நெனச்சி
இருக்குற நெலத்த
நெக்குருகி நெலக்குத்தி
காப்பாத்தி வச்சா
கழுகுக்கணக்கா
கொத்திட்டுபோக
கொலவெறியோட
வந்தவக மறிச்சி
நின்ன என்னையும்
மயிராண்டிக
கூட்டிட்டு போயிட்டாக
ரோடு போட தார் இல்லன்னா
எங்க ரத்த சதையுல
போட்டுக்கோங்க
ஆனா, அரசாளும்
அரக்கர் கூட்டம்
அழியுற நாள்
தூர இல்ல…!

– பாலா சக்ரவர்த்தி

Leave A Reply

%d bloggers like this: