அகமதாபாத் :

கடந்த 2016 டிசம்பரில் கருப்பு பணம் மற்றும் கள்ள பணங்களை ஒழிக்கப்போவதாக பிரதமர் மோடி உயர்மதிப்பு கொண்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். இதனால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள், தொழில்முனைவோர், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் இதே நிலைதான் நீடித்தது.

அதன் பின்பு கொடுக்கப்பட்ட காலவரையறையை தாண்டியும் அந்த ரூபாய் நோட்டுகள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் சந்கேடா காவல்துறை மற்றும் அம்மாநில குற்றப்பிரிவு போலிசாரின் சிறப்புக்குழு 4 பேரை கைது செய்துள்ளது. அதில் 500 ரூபாயில் 12800 நோட்டுகளும், 1000 ரூபாயில் 3599 நோட்டுகளும் உட்பட சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த பணத்தை எதாவதொரு பங்கு லாபத்தில் மாற்ற எடுத்து வந்துள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: