சென்னை,
மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு திங்களன்று (ஜூன் 18) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து என தெரிவித்தார். தனிப்பட்ட கருத்துக்கும் சட்டப்பூர்வமான கருத்துக் கும் வித்தியாசம் உள்ளது. தனிப்பட்ட கருத்து வேறாக இருந்தாலும், வழக்குகளில் சட்டத்திற்கு உட்பட்டு, வழக்குரைஞர்களின் வாதங் களைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் வழக்கு விசாரணையை ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave A Reply