சேலம்,
சேலம் அருகே முத்துநாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்துதிரளான பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்சனைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் சேலம் மாவட்டம், முத்துநாயக்கன்பட்டி பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது;- முத்துநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையினால் மது அருந்திவிட்டு அந்த வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளை ஆபாச வார்த்தைகளை கூறி வருகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு பலர் சாலையிலேயே விழுந்து கிடக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: