“போரை நிறுத்து..போரை நிறுத்து..!!

வேண்டும் வேண்டும் சமாதானம் வேண்டும் !!”

எனும் முழக்கங்களுடன் ரம்ஜான் நோன்பிருந்து கொண்டே காபூலை நோக்கிய தமது 700 கிமீ நடைப்பயணத்தை சமாதானத்தை நேசிக்கும் ஆப்கானியர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

இந்த நடைப்பயணம் அறிவிக்கப்பட்ட போது கேலி செய்தவர்களும் கூட வியக்கும் வண்ணம் பெரும் மக்கள் ஆதரவுடன் இது நிறைவுற்றுள்ளது,

பெருநாளை ஒட்டி 3 நாள் போர் நிறுத்தத்தை தாலிபன் அறிவித்தது. அரசு பத்துநாள் போர் நிறுத்தம் அறிவித்திருந்தது. தாலிபன் 3 நாள் போர் நிறுத்தத்தைத் தொடராத நிலையில் இப்போது இந்த சமாதானப் போராளிகள் சென்ற 23 அன்று தொடங்கிய தம் நடைப் பயணத்தை முடித்துள்ளனர்.

“நாங்கள் அரசு, தாலிபன் – இருதரப்பையும் வேண்டிக் கொள்கிறோம்…..போரை நிறுத்துங்கள்”

என இவர்கள் கோரியுள்ளனர்.

Marx Anthonisamy

Leave a Reply

You must be logged in to post a comment.