சிதம்பரம்,ஜூன்.18-

காட்டுமன்னார்கோயில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரசெயலாளர் கோ.கரும்பாயிரம் கடந்த 3-ந்தேதி உடல் நல குறைவால் காலமானர். இவரது படத்திறப்பு நிகழ்ச்சி காட்டுமன்னார்கோயிலில் திங்களன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மூத்த தோழர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.  கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது படத்தை திறந்து மலர் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில் கரும்பாயிரம் ஆசிரியர் பணி செய்து கொண்டு இந்த பகுதியில் கட்சியை வளர்த்தவர். அவர் பள்ளியின் ஆசிரியராக மட்டும் இல்லாமல் கட்சிக்கும் ஆசிரியராக இருந்தார். வாழ்கை வேறு கட்சி வேறு  என்று இல்லாமல் வாழ்ந்து மறைந்துள்ளார். இதுபோன்ற தலைவர்கள் அப்போதைய அடக்குமுறை காலங்களில் செய்த தியாகங்களால் தான் இன்று கட்சி வளர்ந்துள்ளது என்று புகழாரம் சூட்டினார்.

இதனைதொடர்ந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா,மாவட்டக்குழு கற்பனைச்செல்வம், விதோச மாவட்ட செயலாளர் பிரகாஷ், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில நிர்வாகி கண்ணன்,.மனித உரிமை கட்சியின் தலைவர் விஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணித்தலைவர் பசுமைவளவன் ஆகியோர் கரும்பாயிரம் கட்சிக்கு செய்த பணிகள் குறித்து பேசினார்கள். இதில் கரும்பாயிரம் குடும்பத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பசுமைவளவன் ஆகியோர் தீக்கதிர் ஆண்டு சந்தாவுக்கான பணத்தை மாநில செயலாளரிடம் வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.