ஹைதராபாத் :

தெழுங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் பெண் ஒருவரை எட்டி உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

தெழுங்கானா மாநிலத்தின் நசாமாபாத் மாவட்டத்தில் உள்ள தற்பாலி மண்டல் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் இம்மாடி கோபியின் நிலத்தை வாங்க சுமார் 33 லட்சம் பணத்தை அளித்துள்ளார். பத்திர பதிவு நடந்து முடிந்த பின்பும் அவர் பத்திரத்தை வழங்காமல் மேலும் 50 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பெண் பஞ்சாயத்து தலைவர் கோபியை தாக்கியுள்ளார்.

இதன்பின்பு நடந்த பிரச்சனையில் இம்மாடி கோபி அந்த பெண்ணை எட்டி உதைத்துள்ளார். அதைத்தொடர்ந்து கோபியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோபியின் தரப்பிலிருந்தும் அந்த பெண்ணின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: