சென்னை,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதுதொடர் பாக தமிழக சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் குழுவும் விசாரித்து வருகிறது. இது தவிர இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப் பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் அரசு கட்சி சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பது, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அரசாங்கம் உண்மை நிலவரங்களை தெரிவிக்க மறுத்து வருவதால் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப் பட்டிருந்தது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இந்த மனு திங்களன்று (ஜூன் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக் கப்பட்டன. இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று கூறினார். இதுதொடர்பாக மனுதாரர் சி.பி.ஐ.யை அணுகலாம் என்றும் கூறினார். அதேசமயம் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.