கேந்திரிய வித்தியாலயா மற்றும் சிபிஎஸ்இ சார்பு தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர் பணிக்கு ஆளெடுப்பதில் இதுவரை இருந்துவந்த முறையை மாற்றியிருக்கிறது மோடி அரசு. இதுவரை ஆசிரியர்களின் தகுதித்தேர்வில் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் இருந்துவந்தன. இப்போது இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற மொழிகளை (தமிழ், தெலுங்கு, வங்காளி உள்பட 16 மாநில மொழிகளையும்) நீக்கியிருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசுப் பணிகளை மொத்தமாகவே இந்தி பேசுபவர்களுக்கும் அதிலும் சமஸ்கிருதம் படிக்கும் பார்ப்பனர்களுக்கும் மட்டுமே ஒதுக்கவேண்டும் என்கிற மோடி அரசின் திட்டம் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக இதைப் பார்க்கவேண்டும்.

தமிழ் உள்பட அனைத்து தேசிய இனங்களின் மொழிகளையும் அதிகாரமிழக்கச்செய்வதே மோடி அரசின் உள்நோக்கம், வெளிநோக்கம் எல்லாம்.

இது ஒட்டுமொத்தமாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படுவதுடன். பள்ளிகளிலிருந்தே தமிழ் போன்ற மொழிகளை ஒழித்துக்கட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளில் ஒன்று என்பதை மறந்துவிடவேண்டாம். அண்மையில் நீட் தேர்தில் மாநில மொழிகளில் கேள்வித்தாளை அளிக்கத்தேவையில்லை என்றும் மத்திய அரசு முடிவெடுத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் மட்டுமே அனைத்து அதிகாரங்களும் என்கிற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வேகமாக நடைமுறைப்படுத்திவரும் மோடி அரசுக்கு எதிராக நமது மொழிப்போராட்டத்தை நாம் தீவிரமாக்கவேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.