திருப்பூர்,
தாராபுரம் அலங்கியம் பகுதியில் சட்டவிரோதமாக போடப்பட்ட குடிநீர் குழாயை அகற்றக்கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் திங்களன்று அலங்கியம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தாராபுரம் அலங்கியம் அருகே சீதக்காடு பகுதியில் இருந்து குடிநீரை சட்ட விரோதமாக குழாய் அமைத்து கொங்கூர் ஊராட்சிக்கு கொண்டு செல்ல முயன்றதை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் தாராபுரம் சார்- ஆட்சியர் குழாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

ஆனால் தற்போது வரைகுழாய்கள் அப்புறப்படுத்தவில்லை. ஆகவே, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டது. ஆனால், பெரும்பாலனோர் ஏலம் எடுத்த தொகையை நகராட்சிக்கு செலுத்துவது இல்லை.அதேநேரம், கடைகளைமீண்டும் புதுப்பித்து உரிமங்களை அதே கடைக்காரர்களுக்கு நிர்வாகம் வழங்கி உள்ளது. இதனால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து விசாரித்து மீண்டும் ஏலம் விட ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறுப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: