தீக்கதிர்

கோவா : இளம்பெண்ணை போலீஸ் கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்த கொடுரம்…!

பனாஜி: பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

கோவா மாநிலத்தில் வாஸ்கோ டி.எஸ்.பி அலுவலகத்தில் சிதார்த் கோசாவி கான்ஸ்டபிள் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமையன்று இரவு  17 வயது இளம்பெண்ணை விட்டில் விட்டுவிடுவதாக கூறி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அப்பெண்ணை போண்ட நகருக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணை கட்டாய வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனார். பிறகு காலையில் அப்பெண்ணின் விட்டில் விட்டுச்சென்றுள்ளார்.

இச்சம்பவத்தை  அறிந்த அப்பெண்ணின் தாயார் உடனே கான்ஸ்டபிள்   சிதார்த் கோசாவி மீது புகார் கொடுத்துள்ளார். வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் உடனே சிதார்த் கோசாவியை கைது செய்தனர். மேலும் கடந்த மாதத்தில் ஒரு சிறுவன் தன்னிடம்  தவறாக நடந்து கொண்டதாக அப்பெண் கூறியுள்ளார். அச்சிறுவனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்