திருப்பூர்,
ஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டியை மூடாத பல்லடம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

திருப்பூர் பல்லடம் மாணிக்காபுரம் சாலையிலிருந்து மங்கலம் சாலைக்குச் செல்லக்கூடிய பாரதிபுரம் சாலையில் நாள்தோறும் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக குடிநீர் பணிக்காக 6 அடி ஆழமுள்ள குடிநீர்த் தொட்டி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிந்தும் அதன் பிறகும் அவை மூடப்படாமல் உள்ளது. இதனால் அன்றாடம் குழந்தைகள் பெண்கள் இருசக்கர வாகனத்தில் வருவோர் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டு உள்ளே விழுந்து காயமடையும் நிகழ்வு அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இதுதொடர்பாக பல்லடம் நகராட்சியின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் இந்த பள்ளத்தை மூடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களே இப்பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஆவேசமாக தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.