தாராபுரம்,
தாராபுரம் அமராவதி ஆற்றில் முழ்கி திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரளா மாநிலம், மூணாரை சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவரது மகன் கவியரசு (21). இவர் திருப்பூர் கரட்டாங்காடு பகுதியில் உள்ள பனியன் கம்பெனி டையிங் பேக்டரியில் பிரிண்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று தனது நண்பர்களுடன் தாராபுரம் புறவழிச்சாலை அமராவதி பாலம் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த கவியரசு, தீடீரென நீரில் முழ்கினார். இதையடுத்து அவரது நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் பலனிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இகுறித்து அறிந்த தாராபுரம் தீயணைப்புதுறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவு வரை உடல் கிடைக்காததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இதன்பின் திங்களன்று காலை கவியரசுவின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆண்டு இப்பகுதியில் குளித்த 4 பேர் நீரில் முழ்கி பலியாகினர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் சார்பில் அப்பகுதியில் குளிக்க தடை விதித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதனையும் மீறி குளித்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: