கோவை,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழைப்பொழிவின் காரணமாக கோவை குற்றாலம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல 9 ஆவது நாளாக தடை செய்யப்பட்டுள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறுவாணி அடிவாரம், பூண்டி, கோவை குற்றாலம் பகுதியில் கடந்த ஒருவாரமாக சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாடிவயல் அருகேயுள்ள கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றின் காரணமாக அருவிக்கு செல்லும் வழியில் ராட்சத மரங்கள் சாலையில் விழுந்தது. இதனால் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது.மேலும், கோவை குற்றாலத்தில் அதிக அளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாவட்ட வன அதிகாரி வெங்கடேசன் அலுவலர் உத்தரவின் பேரில் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து வெள்ள பெருக்கு, மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், ஞாயிறன்றும் தடை நீட்டிக்கப்பட்டது. வெள்ள பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் கடந்த 9 நாட்களாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறுவாணி சாலையில் கோவை குற்றாலம் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சீர்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிர மாக பணியாற்றி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: