சுமார் ஏழு மணிக்கு அலுவலகத்திலிருந்து இறங்கிச் செல்கிறார் ஆசிரியர். அடுத்த நாள் வர வேண்டிய பத்திரிக்கை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் குழுவினர் வெளியே ஏதோ வெடிச்சத்தம் கேட்கின்றனர். ஓடிப் போய்ப் பார்த்தால் ரத்த வெள்ளத்தில் காரின் பின் இருக்கையில் கிடக்கிறார். அவரை வாரி எடுத்து மருத்துவமனைக்குச் செல்லும் காவல் துறை வாகனத்தை பதைபதைப்புடன் தொடர்கின்றனர். உயிர் பிரிந்துவிட்டது எனக் கேட்டவுடன் துயரமும் அதிர்ச்சியும் கண்ணீராய்ப் பெருகுகிறது. மூன்று வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்து மருத்துவமனையில் கிடந்தபோது ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வருகிறது. “நான் வீழ்ந்தாலும் பத்திரிக்கை தொடர வேண்டும்”
உடனே அலுவலகத்துக்கு விரைகிறார்கள். ஆசிரியரின் உடல் அவர் பிறந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நள்ளிரவையும் தாண்டி பணிபுரிந்து 16 பக்கங்கள். ஆசிரியரே தலைப்புச் செய்தியாய்!
சகாக்களே வீர வணக்கம்!
சகாக்களே முன்னேறுவோம்!

Leave A Reply

%d bloggers like this: