வேலூர்,
வேலூர் மாவட்டம் வாணியம் பாடி அருகே ஆந்திர மாநில பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

வேலூர் மாவட்டம் கள்ளர சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 27 பேர், ஆந்திர மாநிலம் குப்பம் அருகேயுள்ள கிராமத்திற்கு மாங்காய் பறிக்கும் வேலைக்குச் சென்றிருந்தனர். பணி முடிந்ததும் மாங்காய் லோடு ஏற்றிச் சென்ற லாரியிலேயே 27 பேரும் பயணித்துள்ளனர். தமிழக – ஆந்திர எல்லையான பெரும்பள்ளம் என்ற பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 70 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த கூலித்தொழிலாளிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 19 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனை, வாணியம் பாடி, குப்பம், சித்தூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்தில் சிக்கி வேலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தநாராயணன் (30) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: