நாமக்கல்,
மணல் திருட்டை தடுத்து தமிழக அரசே மணல் கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் 18வது மாநாடு எலச்சிப்பாளையத்தில் சமுதாய நலகூடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. கட்டுமான சங்கத்தின் சங்க கொடியினை மூத்த தோழர் எம்.செங்கோடன் கொடியேற்றிவைத்தார். மாவட்ட தலைவர் சரபோஜன் தலைமையில் நடைபெற்றது. எஸ்.செல்வம் வரவேற்புரையாற்றினார். மாநாட்டை சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜாமுகமது துவக்கிவைத்து பேசினார். இம்மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, வார்பிங் சைசிங் சங்க தலைவர் எம்.செங்கோடன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் பி.ராமசாமி, சிபிஎம் தாலுகா செயலாளர் சு.சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக, இம்மாநாட்டில் தனியார் மூலம் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து தமிழக அரசேமணல் விற்பனை செய்ய வேண்டும். அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ, பிஎப், விபத்து காப்பீடு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். விபத்துகளால் ஏற்படும் மருத்துவ செலவுகளை அரசு நலவாரியமும் மூலமாக மருத்துவ செலவுகள் செய்திட வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை நிலம் வழங்கவேண்டும். பெண் கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் பெறும் தொழிலாளிக்கு 55 வயது என்பதை உறுதிபடுத்தி நலவாரியம் மூலம் பென்சன் வழங்கவேண்டும். அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையை உயர்த்தி மாதம் ரூ.3 ஆயிரமாக வழங்க வேண்டும். விபத்து நடந்து இறப்பு ஏற்பட்டால் இறப்பு நிதியாக ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. முன்னதாக, இம்மாநாட்டில் புதிய மாவட்டத் தலைவராக சரபோஜன், செயலாளராக கு.சிவராஜ், பொருளாளராக கே.கண்னண் உள்ளிட்ட 18 பேர் கொண்டபுதிய மாவட்ட குழு தேர்வுசெய்யபட்டனர். சிஐடியு மாநில உதவித்தலைவர் எம்.சந்தரன், மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி மாநாட்டை நிறைவு செய்து புதிய நிர்வாகிகளை அறிமுகபடுத்தி பேசினார். இறுதியாக வரவேற்புகுழு தலைவர் எஸ். செல்வராஜ் நன்றி கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.