வால்பாறை,
வால்பாறையில் பொதுமக்களை தாக்கியும் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த ஒரு மாதகாலமாக சிறுத்தைப் புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. அந்த சிறுத்தை இதுவரை நான்கு பேரை காயப்படுத்தியதோடு, ஒருவரை கொன்றது. இதன் காரணமாக வால்பாறையில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க தீவிரநடவடிக்கை மேற்கொண்டனர். சின்கோனா பகுதி குடியிருப்பு உட்பட மூன்று இடத்தில் கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டது. மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க நவீன காமிரா பொருத்தப்பட்டது. இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை சின்கோனாவில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தைப் புலி சிக்கியது. தொடர்ந்து சிறுத்தை சிக்கிய கூண்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தற்போது, சிறுத்தைப் புலி பிடிபட்டிருந்தாலும், மேலும், சில சிறுத்தைகள் சுற்றித் திரிவதால், வால்பாறையில் தொடர்ந்து, கூண்டு வைத்து கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.