லெதார்: ஜார்க்கண்டின் லெதார் மாவட்டத்தில் உள்ள உவ்வாவல் கிராமத்தில் பாராஹியா பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சார்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி அடையாதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சலிதார் பராஹியா வயது 45 கூலி தொழிலாளியின் மகள் அணு குமாரி பத்தாம் வகுப்பை தேர்ச்சியடைந்துள்ளார். ஜார்க்கண்ட் கல்வி கவுன்சில் நடத்திய மெட்ரிகுலேஷன் பரீட்சையில் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் இக்கிராமத்தில் முதல் முறையாக அதுவும் பத்தாம் வகுப்பை தேர்ச்சி பெற்ற முதல் பெண்ணான இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது குறித்து பேசிய அணு குமாரி ” தனது வெற்றிக்கு காரணம் தனது தந்தை மற்றும் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணா குமார் தான் என்று கூறியுள்ளார். மேலும் அரசு அதிகாரி ஆவதே எனது லட்சியம் என அணு குமாரி கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: