திருப்பூர்,
திருப்பூரில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பத்மாவதிபுரம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.  தினந்தோறும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை தனியார் நிர்ணையிக்கும் போக்கை கைவிட்டு அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அடுப்பு மூட்டி சமையல் செய்யும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவி, மாநில கட்டுப்பாடு குழு உறுப்பினர் காளியப்பன், மாவட்ட பொருளாளர் பி.ஆர்.நடநாஜன், முதலாவது மண்டல செயலாளர் பி.செல்வராஜ் மற்றும் ஏஐடியுசி பனியன் தொழிலாளர் சங்க செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில் பெண்கள்  உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.