கொல்லிமலை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கொல்லிமலை துரைசாமி வயது மூப்பின் காரணமாக ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது 96. 1950 ஆம் ஆண்டு முதல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் முன்னணி ஊழியராக செயல்பட்டு வந்தார். கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தார். இதன் காரணமாக தோழர்கள் துரைசாமி, டி .கே. தம்பி இருவரையும் ராணுவம் தேடியது.

கொல்லிமலை மக்களுக்கு மருத்துவமனை, சாலை வசதி போன்ற பல்வேறு அடிப்படை தேவைக்காக மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தார். ஆயிரத்திற்கும் அதிகமானமக்களை திரட்டி சேலம் வரை நடைபயணம் மேற்கொண்டார். கொல்லிமலையின் ஒன்றியத் பெருந்தலைவராகவும் திறம்பட செயல்பட்டவர். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தில் ஏராளமான போராட்டங்களில் மக்களோடு இணைந்து பணியாற்றியவர். வயது மூப்பின் காரணமாக காலமான தோழர் கொல்லிமலை துரைசாமியின் உடலுக்கு கட்சியின் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  பிறகு நடந்த இரங்கல் கூட்டத்தில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க நாமக்கல் மாவட்டச் செயலாளர் வி .கேராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எ.பொன்னுசாமி, மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நாம கிரிப்பேட்டை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சின்னுசாமி, கொல்லிமலை ஒன்றியச் செயலாளர் சண்முகம், கொல்லிமலை கே.வி. ராஜூ, மாணிக்கம், வி.கே. வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.