புதுதில்லி :

கடந்த மே மாதத்திற்கான ஊதியத்தை ஏர் இந்தியாவின் பெரும்பாலான ஊழியர்கள் கடந்த ஜுன் 12 அன்று பெற்றுள்ள நிலையில் சுமார் 3000 விமான ஓட்டிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு இன்னும் 80% ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த ஒரு வருடமாக அடிப்படை ஊதியத்தை தவிர அளிக்க வேண்டிய மற்ற சலுகைகள் எதையும் அளிக்கவில்லை மற்றும் மே மாதம் உட்பட கடந்த 4 மாதங்களாக ஊதியம் தாமதமாக வழங்கப்படுகிறது என இந்திய வியாபார விமான ஓட்டிகள் சங்கம் மத்திய விமான போக்குவரத்து துறையின் தலைமை இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். மேலும், அதில் விமான ஓட்டிகள் என்பவர்கள் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படக் கூடாத பணீயாளர்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: