புதுதில்லி:
சங்-பரிவாரக் கூட்டத்தைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிசத்தும், பஜ்ரங் தளமும் மத அடிப்படையிலான பயங்கரவாத குழுக்கள் என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ அறிக்கை அளித்துள்ளது.

இதையொட்டி, இந்த அமைப்புகளுக்கு சர்வதேச அளவில் கிடைக்கும் நிதி உதவிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தற்போது கோரிக்கைகள் எழுந்துள்ளன. மத பயங்கரவாத இயக்கங்கள் என்ற வகைப்படுத்துதலில் இருப்பதால் விஎச்பி, பஜ்ரங் தள் ஆகியவற்றுக்கு வெளிநாட்டு நிதி உதவி தானாகவே குறையும் என்றாலும், இந்த இரு அமைப்புகளுக்கும் சர்வதேச அளவில் நிதி அளிப்பது உள்ளிட்ட ஆதரவுகளைத் தடை செய்ய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும் இந்த அமைப்புக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தத் துவங்கியுள்ளனர்.இது விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தள் கூட்டத்திற்கு புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பெரும்பணக்காரர்கள்தான் இந்த அமைப்புகளுக்கு வெளிப்படையாக நிதி உதவி செய்து வந்தனர்; ஆனால், சிஐஏ அறிக்கையால் இனி அவ்வாறு வெளிப்படையாக நிதியுதவி வழங்க முடியாது.
எனவே, விஎச்பி-யும், பஜ்ரங் தளமும், சிஐஏ-வின் பட்டியலில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

அமெரிக்காவை மிரட்டும் விஎச்பி
மறுபுறத்தில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பினர் தங்கள் கருத்தைத் திரும்பப்பெறவில்லை என்றால் உலகளாவிய கிளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ‘சிஐஏ கூறியிருப்பது உண்மைக்கு மாறான தகவல்; மத்திய அரசு தலையிட்டு சி.ஐ.ஏ அமைப்பு மீது அமெரிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்’ என்றும் விஎச்பி கூறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.