லண்டன்:
இந்திய வங்கிகளுக்கு வழக்குச் செலவாக விஜய் மல்லையா ரூ. 1 கோடியே 80 லட்சம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சாராய ஆலை முதலாளியான விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 இந்திய வங்கிகளிடம் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடி விட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.மல்லையாவின் உலகளாவிய சொத்துகளை முடக்க வேண்டும் என்றும் என்று இந்திய நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சொத்துகளை முடக்கும் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மல்லையா முறையிட்டார். ஆனால், அந்த உத்தரவுக்கு தடை விதிக்க, நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா மறுத்து விட்டார். விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதியும் வழங்கினார்.

தற்போது, இந்திய வங்கிகளின் உலகளாவிய உத்தரவையும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் இங்கிலாந்தில் பதிவுசெய்ய இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட வழக்குச் செலவுக்காக அந்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா 2 லட்சம் பவுண்டு ( ரூ. 1 கோடியே 80 லட்சம்) வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: