புதுதில்லி :

மத்திய அரசின் ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வரும் நிதி அயோக் வியாழன் அன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியா மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், சரியான நடவடிக்கைகள் இல்லை என்றால் 2030ல் 40% இந்திய மக்களுக்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும், வரும் 2020ல் தில்லி, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற இந்தியாவின் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் அற்ற நிலை உருவாகும் எனவும் அறிவித்துள்ளது.

ஆரோக்கியமான குடிநீரின் பற்றாக்குறையால் மட்டும் வருடம் 2,00,000 பேர் உயிரிழப்பதாகவும், அரசு வழங்கும் குடிநீரில் 70% நீர் அசுத்தமானவை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், மாநிலங்கள் வாரியான தண்ணீர் கையாளும் வரிசையில் நாகலாந்து, உத்தரகண்ட் மற்றும் மேகாலயா ஆகியவை கடைசி மூன்று மாநிலங்களாக உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.