ஸ்ரீநகர் :

ஜம்மு காஷ்மீர் கிராமப்புறங்களில் சுகாதார கட்டமைப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும், முக்கியமாக பெண்களுக்கான சரியான சிகிச்சை பெற தலைநகர் ஸ்ரீநகர் செல்ல வேண்டியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநில சுகாதாரத்துறை தனது வலைத்தளத்தில் பிரமிக்கத்தக்க வளர்ச்சிக்கும் முக்கியமாக கிராமப்புறங்களில் சுகாதாரத்தை கொண்டு செல்லவும் இலக்கு கொண்டுள்ளதாக பதிவிட்டுள்ளது. ஆனால், கிராமப்புறங்களோ எந்த சுகாதார வசதியும் இன்றி இருக்கின்றன.

இதனால் பெண்களின் சிறு பிரச்சனைகளுக்கும் தங்களின் மாவட்டத்தை விட்டு கடுமையான பயணத்திற்கு பிறகு நகரம் நோக்கி செல்ல வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படி இருக்கும் மருத்துவமனைகளிலும் 2 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகவும், சில இடங்களில் டிப்ளமோ படித்தவர்கள் மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குப்வாரா மாவட்டத்தின் லோலாப் என்ற இடத்திலிருந்து ஸ்ரீநகருக்கு சஹாசடா என்ற பெண் ஒருவர் தனது மகளை சிகிச்சைக்காக தொடர்ந்து அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும், போக்குவரத்தினால் உடல்நிலை தொடர்ந்து மோசமாக மாறுவதாகவும், சிகிச்சைக்கு அங்கு ஒரேயொரு பெண் மருத்துவர் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். சில சமயங்களில் மருத்துவரை பார்க்காமலும் திரும்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: