ஏடிஜிபிக்கு கார் ஓட்டும் காவலரை தாக்கிய ஏடிஜிபி மகள் மீது வழக்கு கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஏடிஜிபியை இடமாற்றமும் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவனந்தபுரத்தில் ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபி.யாக இருப்பவர் சுதேஷ் குமார். இவரது அலுவலக கார் ஓட்டுநராக கவாஸ்கர் என்ற காவலர் இருந்து வருகிறார். இவர்  கடந்த 3 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தவர் ஆவார். இவர் வெள்ளியன்று  காலை ஏடிஜிபி சுதேஷின் மனைவியும், மகள் ஸ்னிக்தா குமாரும் நடைப்பயிற்சிக்காக காரில் சென்றிருக்கின்றனர். அப்போது கார் டிரைவரும் காவலருமான கவாஸ்கர் அவர்களை இறக்கி விட்டு விட்டு திரும்ப வண்டியை எடுத்துச்சென்றிருக்கிறார். பின்னர் மீண்டும் நடைபயிற்சிக்கு சென்றவர்களை அழைக்க சென்றிருக்கிறார். அப்போது ஏடிஜிபியின் மகள் ஸ்னிக்தா ஓட்டுநர் காவஸ்கரை மிகவும் கடுமையாக திட்டியிருக்கிறார். இதையடுத்து, நான் ஏடிஜிபிக்கு மட்டுமே ஓட்டுநர் இப்படி பேசினால் என்னால் காரை எடுக்க முடியாது என மறுத்திருக்கிறார். உடனே ஆத்திரமடைந்த ஏடிஜிபி மகள் ஸ்னிக்தா தனது கையில் வைத்திருந்த செல்போனால் காவஸ்கர் கழுத்தின் பின்பகுதியில் தாக்கியிருக்கிறார். இதில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த காயத்தோடு காவலர் கவாஸ்கர் ஏடிஜிபி மகள் மற்றும் மனைவியை ஏற்றிக் கொண்டு  அவர்களை வீட்டில் விட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். சென்றவர் நேராக காவல்நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை புகாராக எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த தகவல் பரவியவுடன் உயர் காவல்அதிகாரிகள் கவாஸ்கரை பேசிக்கொள்ளலாம்  வழக்கை வாபஸ் பெறுங்கள் நிர்பந்தித்துள்ளனர். இந்நிலையில் புகாரை பெற்றுக் கொண்ட காவல்நிலையத்தில் கவாஸ்கரின் புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்த காவல்துறைனர் உரிய பிரிவுகளில் ஏடிஜிபியின் மகள் ஸ்னிக்தாகுமார் மீது ஐபிசி 294பி, 332, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஏடிஜிபியின் கார் ஓட்டுநர் காவலர் கவாஸ்கரின் குடும்பத்தினர் இன்று முதல்வர் பினராயி விஜயனை நேரில் சென்று மனு அளித்து, ஏடிஜிபி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மனுவைப் பெற்ற முதல்வர் பினராயி விஜயன் உரிய நடவடிக்கை எடுக்கப்புடும் என்று உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து காவல்துறை டிஜிபி  லோக்நாத் பேரா கூறுகையில், கவாஸ்கர் தாக்கப்பட்ட விஷயத்தில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சில அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை மோசமாக நடத்துவதும், அரசு வாகனத்தைச் சொந்த பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் போலீஸ் ஏடிஜிபி சுதேஷ் குமார் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணியாற்றும் கீழமை அதிகாரிகளை மோசமாக நடத்துவதற்கு  கேரள காவலர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.