திருப்பூர்,
திருப்பூர் ராயபுரம் பகுதியில் வெட்டப்பட்ட மரங்கள் அப்புறப்படுத்தாமல் சாலையில் கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 திருப்பூர் ராயபுரம் ஸ்டேட்பாங்க் காலனி செல்லும் சாலையில் மின் கம்பிகளில் மரங்கள் உரசுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க மின்சார வாரியத்தின் சார்பில் மரங்களை வெட்டினார். வெட்டிய மரங்களை சாலையிலே கடந்த இரண்டு நாட்களாக கிடக்கின்றன. இச்சாலை குறுகளாக இருப்பதால் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றது.  மேலும், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே சாலையில் கிடக்கும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: