தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் விவசாய கூலித் தொழிலாளர்கள் உள்ளனர்.
ஒரு ஊரில் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் அதில் 800 ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கி
றது. 200 ஏக்கரில் தான் விவசாயமே நடைபெறுகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாளை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அந்தத் திட்டத்தையே சாகடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசு குறுவை சாகுபடிக்கு ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் எந்திர நடவுக்கு ரூ.40 கோடியும், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.24 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. விவசாயிகளுக்கும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.24 கோடியை எப்படி வழங்கப்போகிறதென்று தெரியவில்லை.

மத்திய அரசும், மாநில அரசும் கைகோர்த்துக் கொண்டு நூறுநாள் வேலையை சிதைக்க முயற்சிக்கின்றன. இதற்கெதிரான போராட்டத்தை கிராமப்புற உழைப்பாளி மக்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.
சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் பேசியதிலிருந்து

Leave a Reply

You must be logged in to post a comment.