பாட்னா:
பாஜக-வையும், வாஜ்பாய்- அத்வானி தலைமையையும் புகழக் கூடிய அக்கட்சியின் எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா, இன்றையத் தலைமையான மோடி – அமித்ஷாவை மட்டும் விமர்சிப்பவராக இருக்கிறார்.இந்நிலையில், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி நடத்திய இப்தார் விருந்திலும் சத்ருகன் சின்ஹா கலந்து கொண்டார். முன்னதாக, லாலு தனது குடும்பத்தில் ஒருவர் என்று சத்ருகன் சின்ஹா பேசினார். பாஜக-வா, லாலுவா? என்றால் தனக்கு லாலுதான் முக்கியம் என்றும் கூறினார்.

இதனால், அவர் விரைவில் பாஜக-வில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. சத்ருகன் சின்ஹா ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தால் வரவேற்போம் என்று லாலு பிரசாத் மகனும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சத்ருகன் சின்ஹா, பாட்னாஷாகிப் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: